வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காகிதப் பயன்பாடு இல்லாத நீதிமன்ற நடவடிக்கைகளை ஒடிசா மாநிலத்தின், 30 மாவட்ட நீதிமன்றங்களில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் துவக்கி வைத்தார்.
ஒடிசாவில் முதல்வர் நவின் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, 30 மாவட்ட நீதிமன்றங்களில், காகிதப் பயன்பாடு இல்லாத நீதிமன்ற நடவடிக்கைகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.இந்த வசதியை துவக்கி வைத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் நேற்று பேசியதாவது:
![]() |
கொரோனா வைரஸ் பரவல், நமக்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த, அதற்கேற்ப மாற, நம்மை நவீனப்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளித்துள்ளது. இந்த தொழில்நுட்ப வசதிகளை, நம்முடைய வாழ்க்கையுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.காகிதமில்லா நீதிமன்றத்தின் வாயிலாக, நீதிமன்றம், வழக்கறிஞர்கள், வழக்கு தொடர்ந்துள்ளோர் என, அனைவரின் நேரம் மற்றும் பணத்தை சேமிக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா, ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.முரளிதர்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement