கொடநாடு வழக்கு என பூச்சாண்டி காட்டி அதிமுகவை அச்சுறுத்த முடியாது – ஜெயக்குமார்

கொடநாடு கொலை வழக்கு, ஊழல் வழக்கு என எதைக் கண்டும் அதிமுக பயப்படாது என்றும் இதற்கான அனைத்து பதில்களும் 2026 தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஆர்.எஸ்.பாரதி பதவிக்காக அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசுவது பின்னர் வாங்கி கட்டிக் கொள்வது என தொடர்ந்து பேசி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி சிறிய வயது முதல் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தொடர்ச்சியாக கட்சிக்காக பணிகளை ஆற்றி இப்படி வளர்ந்து உள்ளார். ஆனால் கருணாநிதி வீட்டில் வேலை செய்து அதன் மூலம் தமக்கு கிடைத்த நங்கநல்லூர் சேர்மன் பதவியில் பல ஊழல்களை செய்த ஆர்.எஸ் பாரதி வயதான காலத்தில் அரசியலை விட்டு ஓய்வு பெறாமல் எதையாவது பதவிக்காக உலறி வருகிறார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் இன்று ஆசியாவில் மிகப் பெரிய பணக்கார குடும்பமாக மாறியது எப்படி? இதற்கெல்லாம் 2026ஆம் ஆண்டு தேர்தலில் பதில் அடி கொடுக்கப்படும். கொடநாடு வழக்கில் தவறு செய்தவர்களை கைது செய்தபோது அவர்களை ஜாமீனில் எடுத்தவர்கள் திமுக தான். கொட நாடு கொள்ளை கொலை வழக்கு, ஊழல் வழக்கு என திமுகவினர் பூச்சாண்டி செய்வதை பார்த்து அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள். இதை அனைத்தையும் சட்டபூர்வமாக அதிமுக எதிர்கொள்ளும்.” எனத் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.