சியோபூர்: நமீபியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் கடந்த சனிக்கிழமை பிரதமர் மோடி விடுவித்தார். இது குனோ தேசிய பூங்கா வட்டாரங்கள் மேலும் கூறியது: நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளுக்கு, ஆஷா, சியாயா, சியாசா, சவன்னா, சஷா, ஃபெரெடி, ஒபன் மற்றும் சிபிலி என பெயரிடப்பட்டுள்ளது.
நமீபியா நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு முதன் முதலாக கடந்த சனிக்கிழமை குனோ தேசிய பூங்காவில் விடப்பட்ட சிறுத்தைகள் இந்தியாவில் முதல் சூரியோதயத்தை ஞாயிற்றுக்கிழமை கண்டன. நீண்ட பயணத்துக்கான களைப்பு மற்றும் புதிய சூழலால் ஏற்பட்டுள்ள மிரட்சி ஆகியவை சிறுத்தைகளிடம் தென்பட்ட போதிலும் அவை நலமாகவே உள்ளன. 24 மணி நேரமும் சிறுத்தையின் உடல் நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பூங்கா வட்டாரங்கள் தெரிவித்தன.