சென்னை:
95வது
ஆஸ்கர்
விருதுகள்
வழங்கும்
விழா
அடுத்தாண்டு
மார்ச்
மாதம்
நடைபெறுகிறது.
ஆஸ்கர்
விருதுகளுக்காக
வெளிநாட்டுப்
பிரிவின்
கீழ்
இந்தியாவில்
இருந்து
குஜராத்தி
மொழித்
திரைப்படமான
செல்லோ
ஷோ
தேர்வாகியுள்ளது.
ஆர்.ஆர்.ஆர்,
இரவின்
நிழல்
போன்ற
திரைப்படங்கள்
தேர்வாகாத
நிலையில்,
‘செல்லோ
ஷோ;
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
குறித்து
விமர்சனங்கள்
எழுந்துள்ளன.
இந்தியாவில்
இருந்து
ஆஸ்கர்
செல்லும்
செல்லோ
ஷோ
ஆஸ்கர்
அகாடமி
விருதுகளுக்கான
வெளிநாட்டு
மொழி
பிரிவின்
கீழ்,
இந்தியத்
திரைப்படங்கள்
தேர்வு
செய்யப்பட்டுள்ளன.
டிஎஸ்
நாகபரணா
தலைமையிலான
19பேர்
கொண்ட
குழு
தேர்வு
செய்துள்ளது.
தமிழில்
இருந்து
இரவின்
நிழல்,
இந்தியில்
இருந்து
பதாய்
தோ,
ராக்கெட்ரி
நம்பி,
பிரம்மாஸ்திரம்,
தி
காஷ்மீர்
ஃபைல்ஸ்,
தெலுங்கில்
இருந்து
ஆர்.ஆர்.ஆர்
என
பல
படங்களுக்கு
இடையே
போட்டா
போட்டி
நடைபெற்றது.
ஆனால்,
யாரும்
எதிர்பாரத
வகையில்
குஜாரத்தி
மொழியில்
வெளியான
‘செல்லோ
ஷோ’
தேர்வு
செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
பேன்
நலின்
இயக்கியுள்ள
இந்தப்
படம்,
9வயது
சிறுவனை
பின்னணியாக
வைத்து
உருவாகியுள்ளது.

தேர்வுகுழு
அளித்த
விளக்கம்
ராஜமெளலி
இயக்கிய
ஆர்
ஆர்
ஆர்
திரைப்படம்
தான்
இந்தியாவில்
இருந்து
தேர்வாகும்
என
எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால்,
குஜராத்தி
படமான
செல்லோ
ஷோ
தேர்வாகியுள்ளது
பலரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தப்
படம்
தேர்வு
செய்யப்பட்டது
குறித்து
தேர்வுக்குழுவினர்
விளக்கம்
அளித்திருந்தனர்.
அதில்,
இந்தப்
படம்
வழக்கமான
இந்திய
சினிமாவாக
இல்லாமல்,
உணர்ச்சிகளை
தொடும்
ஒரு
படமாக
தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,
அனைத்தும்
சிறப்பாக
இடம்பெற்றுள்ள
இந்தப்
படத்தில்,
இந்திய
திரைத்துறையின்
பாரம்பரியங்கள்
நுட்பமாக
உள்ளன.
என
தெரிவித்திருந்தது.

கிளம்பியது
புதிய
சர்ச்சை
இந்நிலையில்,
‘செல்லோ
ஷோ’
திரைப்படம்
குறித்து
கடும்
சர்ச்சைகள்
எழுந்துள்ளன.
அதாவது
இந்தியாவில்
இருந்து
ஆஸ்கருக்குச்
செல்லும்
இந்தப்
படம்,
1988;
வெளியான
‘சினிமா
பாரடைசோ’
படத்தின்
காப்பி
என
நெட்டிசன்கள்
விமர்சனம்
செய்துள்ளனர்.
1988ல்
வெளியாகி
ஆஸ்கர்
விருதை
வென்ற
சினிமா
பாரடைசோ
படத்தை
அப்படியே
காப்பி
அடித்து
‘செல்லோ
ஷோ’
படம்
எடுக்கப்பட்டுள்ளதாகவும்
அவர்கள்
குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும்,
இது
ஆஸ்கருக்கான
இந்திய
திரைப்பட
தேர்வுக்
குழுவின்
மிகப்
பெரிய
தவறு
எனவும்
அவர்கள்
சுட்டிக்
காட்டியுள்ளனர்.

சினிமா
பாரடைசோ
பிரம்மாண்டமாக
உருவான
‘ஆர்ஆர்.ஆர்’
படத்தை
நிராகரித்துவிட்டு
‘செல்லோ
ஷோ’
தேர்வாகியுள்ளது
மிகப்
பெரிய
சர்ச்சையாகியுள்ளது.
இந்நிலையில்,
1988ல்
வெளியான
சினிமா
பாரடைசோ
ஆஸ்கர்,
கோல்டன்
குளோப்,
பாஃப்தா
உட்பட
பல
விருதுகளை
வென்றுள்ளது.
Giuseppe
Tornatore
என்பவர்
இயக்கியிருந்த
இந்தப்
படத்துக்கு
உலகம்
முழுவதும்
ஏராளமான
ரசிகர்கள்
உள்ளனர்.
உலகம்
முழுக்க
பிரபலமான
ஒரு
படத்தை
தழுவி
சொல்லே
ஷோ
எடுக்கப்பட்டது
கூட,
தெரியாமல்
மத்தி
அரசின்
தேர்வுக்
குழு
இருக்கிறது
என
நெட்டிசன்கள்
வெளுத்து
வாங்கி
வருகின்றனர்.