வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தெஹ்ரான் : ஈரானில், ‘ஹிஜாப்’ அணிவதற்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 75க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ‘ஹிஜாப்’ எனப்படும் முகத்தையும், தலை முடியையும் மறைக்கும் துணி மற்றும் தலை முதல் கால் வரை உடலை மறைக்கும் கறுப்பு அங்கி கட்டாயமாக அணிய வேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மாசா அமினி, 22, என்ற பெண், தலைமுடியை முழுமையாக மறைக்கும் விதமாக ஹிஜாப் அணியாததற்காக சமீபத்தில் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் இருக்கும்போது மர்மமான முறையில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் நடக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த 10 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தில், போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 75க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அதிபரை குறிப்பிட்டு ‘சர்வாதிகாரி அயதுல்லா அலி கமேனி ஆட்சிக்கு சாவுமணி அடிப்போம்’ என போராட்டக்காரர்கள் கோஷமிடத் துவங்கியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement