வாஷிங்டன், :பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விண்கற்களை திசை திருப்பி விடும், ‘நாசா’வின் முயற்சி வெற்றிகரமாக நடந்துள்ளது.விண்வெளி ஆராய்ச்சியில், நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி அமைப்பு பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பூமியை விண்கற்கள் தாக்குவதை தடுப்பது குறித்து நாசா ஆய்வு செய்தது. இதன்படி, ‘டார்ட்’ எனப்படும், விண்கற்களை திசை திருப்பிவிடும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது.
இந்த முறையில், விண்கலத்தை வேகமாக மோதச் செய்து, விண்கல்லை அதன் பாதையில் இருந்து திசை திருப்பப்படும்.பூமியில் இருந்து, 1.1 கோடி கி.மீ., துாரத்தில் உள்ள ஒரு விண்கல்லை திசை திருப்பும் முயற்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. விண்வெளியில் உள்ள ‘டிமோர்போஸ்’ என்ற அந்த விண்கல், 524 அடி விட்டம் கொண்டது. இது, 2,560 அடி விட்டமுள்ள ‘டிடிமோஸ்’ என்ற விண்கல்லை சுற்றி வருகிறது. இந்த இரண்டு விண்கற்களும் பூமியை தாக்கும் அபாயம் உள்ளது.
நாசாவின் திட்டப்படி, கடந்த, 10 மாதங்களாக விண்வெளியில் சுற்றிவந்த விண்கலம், டிமோர்போஸ் மீது வேகமாக மோதியது. வெறும், 570 கிலோ எடையுள்ள இந்த விண்கலம், மணிக்கு 22 ஆயிரத்து 530 கி.மீ., வேகத்தில் மோதியது. இதன் வாயிலாக, அந்த விண்கல் சுற்றி வரும் பாதை, ௧ சதவீதம் மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் இந்த விண்கல் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement