ஜனாதிபதி இன்று ஜப்பான் பிரதமர் மற்றும் பேரரசரை சந்தித்தார்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கும் (Fumio Kishida) இடையிலான சந்திப்பு இன்று (28) முற்பகல் டோக்கியோவிலுள்ள அகசகா மாளிகையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை அன்புடன் வரவேற்ற ஜப்பானிய பிரதமர், ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு தனது வாழ்த்துகளை இதன்போது தெரிவித்தார்.

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

WhatsApp Image 2022 09 28 at 07.57.41இதேவேளை, ஜப்பானிய பேரரசர் நருஹிதோவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று (28) முற்பகல் நடைபெற்றது.

டோக்கியோவில் உள்ள பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான இம்பீரியல் அரண்மனையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
28-09-2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.