வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு வாங்கிக் கொள்வதான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காததால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
![]() |
இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு பங்கையும் தலா 54.20 டாலருக்கு வாங்கிக் கொள்வதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். இதற்கான ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு விட்டதாக புளூம்பெர்க், ராய்டர் இணையதள செய்தி நிறுவனங்களில் செய்தி வெளியாகியுள்ளன. இதையடுத்து டுவிட்டரின் பெரும்பான்மை பங்குகள் எலான் மஸ்க் வசம் செல்ல உள்ளது. முன்னதாக பெரும்பாலான பங்குதாரர்கள் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்கிடம் விற்க ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement