
ரஜினிகாந்த் பாராட்டு, ஜெயம் ரவி பெரும் மகிழ்ச்சி
மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தில் தலைப்பின் நாயகனாக அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். அவருடைய நடிப்பும் படத்தில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்து ஜெயம் ரவிக்கு அவருடைய பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அது குறித்து ஜெயம் ரவி சற்று முன் தன்னுடைய டுவிட்டரில்,
“அந்த ஒரு நிமிட உரையாடல் எனது நாள், எனது வருடமாகியது, எனது வாழ்க்கைக்கு ஒரு முழு அர்த்தத்தைக் கொடுத்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும், குழந்தை போன்ற ஆர்வத்துக்கும் நன்றி தலைவா. நீங்கள் படத்தையும், எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும், பணிவும், ஆசீர்வாதமும் பெற்றேன்,” என குறிப்பிட்டுள்ளார்.