கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே முருகன் என்பவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், இவருக்கு 52 வயதில் தங்கம் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சமீபத்தில் பேருந்து பயணம் செய்த போது அவர் அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் தான் குறி சொல்பவர் என்று அறிமுகம் செய்து கொண்டு தங்கத்திடம் அவருடைய குடும்ப விபரங்கள் குறித்து கேட்டார்.
அவரும் அந்த குறி சொல்லும் பெண்ணிடம் தெரிவிக்க உடனே அந்த குறி சொல்லும் பெண் உங்கள் மகளுக்கு தோஷம் இருக்கிறது உங்கள் வீட்டிற்கு வந்து தோஷம் கழிக்கிறேன் என்று கூறியுள்ளார். அவர்களது திட்டப்படி நேற்று முன் தினம் தங்கத்தின் வீட்டிற்கு அந்த குறி சொல்லும் பெண் தோஷம் கழிக்க வந்து பரிகார பூஜைகள் செய்துள்ளார்.
அப்பொழுது வீட்டில் இருக்கும் தங்க நகைகளை ஒரு துணியில் கட்டி எடுத்து வரும்படி தெரிவித்துள்ளார். அந்த தங்க நகைகளுக்கு தோஷம் கழிப்பதாக குறி சொல்லும் பெண் கூற அதை நம்பிய தங்கம் வீட்டில் இருந்த 30 பவுன் நகையை சேலையில் கட்டி கொண்டு வந்து கொடுத்தார்.
அதை பூஜை செய்த பின்னர் வீட்டின் அலமாரியில் அதை வைத்துவிட்டு பின் நாளை 6:00 மணிக்கு அந்த நகைகளை திறந்து பார்க்கும் படி கூறிவிட்டு குறி சொல்லும் பெண் அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின் தங்கம் ஆறு மணிக்கு சென்று தங்க நகைகள் இருந்த அலமாரியை பார்த்த போது அதில் தங்க நகைகளுக்கு பதில் கவரிங் நகைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த குற்றத்தில் ஈடுபட்ட பெண்ணை சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்.