2100 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை அன்பளிப்பாக வழங்குகிறது ஹாங்காங்

கொரோனா பரவலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவெடுத்துள்ளது.

தொற்றுநோய் பரவலுக்கு முன் வருடத்திற்கு சுமார் 56 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்ற நிலையில் இரண்டாண்டு பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தற்போது கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து ஹாங்காங் வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் சொந்த செலவில் 21 நாட்கள் ஹோட்டல் அறைகளில் தனிமைப் படுத்தப்படுவார்கள் என்ற அறிவிப்பால் முடங்கிப் போயிருந்த சுற்றுலாத் துறையை மீண்டும் எழுச்சியுற செய்ய ஹாங்காங் விமான நிலைய ஆணையம் (AAHK) இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தலை ஹாங்காங் நீக்கியது.

இதனை அடுத்து, 2020 ம் ஆண்டு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போது உள்ளூர் விமான நிறுவனங்களிடம் இருந்து 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை AAHK வாங்கி வைத்திருந்தது.

ஹாங்காங்-கில் கட்டுப்பாடுகள் நீங்கும் போது இந்த டிக்கெட்டுகள் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஹாங்காங் குடிமக்களுக்கு சுமார் 2100 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 லட்சம் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளது.

விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கும் AAHK அதை பெறுவதற்கான வழிமுறைகளை விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.