மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அமலுக்கு வந்துள்ளது.
இதனால் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதியை அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.