கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்திற்கு தமிழ் நாட்டு ஆசிரியர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.பஞ்சநாதம் விஜயம் செய்துள்ளார்.
துணைவேந்தர் பேராசிரியர் என்.பஞ்சநாதம் நிறுவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சமகால சூழலில் பட்டதாரி மாணவர்களின் மனப்பாங்கினை புரிதல்’ என்னும் தலைப்பிலான செயலமர்வில் உரையாற்றினார்
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக உத்தியோகத்தர் மேம்பாட்டு நிலையத்தின் இணைப்பாளராகிய கலாநிதி ஜயந்தினி விக்னராஜனின் அழைப்பின் பேரில் பேராசிரியர் என்.பஞ்சநாதம் விஜயம் செய்தார்.