12 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் உரம் எதிர்வரும் சில தினங்களில் நாட்டிற்குக் கிடைக்கவிருப்பதாக இராஜாங்க அமைச்சர்மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கு உலகவங்கியின் நிதியுதவி கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பெரும்போகத்திற்குத் தேவையான யூரியா உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெறுவதாகவும் இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா மேலும் கூறினார்.