நாட்டின் முதல் சோலார் கிராமம் இதுதான்… மோடி அறிவிப்பு!

சூரிய மின்சகதி, காற்றாலை மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரி்ப்பதற்கு மத்திய பாஜக அரசு முன்னுரிமை அளித்து செயலாற்றி வருகிறது.

இதன் ஒரு முக்கிய அம்சமாக, குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமத்தை நாட்டின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் மோடி இன்று அறிவித்துள்ளார்.

இந்த கிராமத்தில் மொத்தம் உள்ள 1,300 வீடுகளின் மேற்கூரைகளிலும் சோலார் பேனல்களை மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின்கீழ் இலவசமாக பொருத்தப்பட்டுள்ளன. 80 கோடி செலவில், சுமார் 12 ஹெத்டேர் பரப்பளவில் பிரம்மாண்டமான இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பகல் பொழுதுகளில் சோலார் பேனல்கள் மூலமும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சூரிய ஆற்றலை சேமித்து வைக்கும் பேட்டரி மூலமும் இந்த கிராமம் முழுவதும் மி்ன்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கிராம மக்களின் மின் கட்டணத்தில் 60 -100 சதவீதம் வரை சேமிக்கப்படுவதாக குஜராத் மாநில அரசு பெருமையுடன் தெரிவித்துள்ளது.

மோதேரா கிராமத்தில் உலகப் புகழ் பெற்ற சூரிய கடவுள் கோயில் உள்ளது என்பதும். அதன் அடையாளமாக இந்த கிராமத்தில் மெகா சூரிய மின் உற்பத்தி திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.