பெங்களூரு, : ”பா.ஜ., மூத்த தலைவர் ஜெகதீஷ் ஷெட்டரின் ஆலோசனை பெற்று, தொழிற்துறையில் மேம்பாடு கொண்டு வருவோம்,” என பெரிய, நடுத்தர தொழிற்துறை அமைச்சர் முருகேஷ் நிரானி தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடகா, இப்போதும் தொழில் மண்டலத்தில், நாட்டிலேயே முன்னணியில் உள்ள மாநிலமாக உள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் வருகிறது. முதலீடு செய்யும் தொழிலதிபர்களுக்கு, நாம் அளிக்கும் சலுகைகள் போன்று, நாட்டின் வேறு எந்த மாநிலங்களும் அளிப்பதில்லை.
ஜெகதீஷ் ஷெட்டர் எங்கள் கட்சியின் மூத்த தலைவர். மாநில முதல்வராக, பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தவர். அவரது ஆலோசனைகளை ஏற்போம். சமீபத்தில் நான், முதல்வருடன் தாவோஸ் சென்ற போது, கர்நாடகாவில் தொழிற்துறையில் உள்ள வாய்ப்புகளை விவரித்தோம். தொழிலதிபர்களும், மாநிலத்தில் 52 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்ய முன் வந்துள்ளனர்.
மாநிலத்தில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும். பெங்களூரு மட்டுமின்றி, இரண்டாவது, மூன்றாவது கட்ட நகரங்களிலும், முதலீடு செய்ய தொழிலதிபர்கள் ஆர்வம் காண்பிக்கின்றனர். மைசூரு, மங்களூரு, ஹூப்பள்ளி – தார்வாட், கலபுரகி, ஷிவமொகா, தாவணகரே என மற்ற நகரங்களில், முதலீடு செய்ய உலகின் முக்கியமான தொழிலதிபர்கள் முன் வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement