தாகா: வங்கதேசத்தில் இந்து கோயிலில் இருந்து சாமி சிலைகள் உடைக்கப்பட்டு உள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளி்ல் சமீப காலமாக இந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள் அதிகமாகி இருக்கின்றன.பாகிஸ்தானில் இந்து இளம்பெண்கள் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மதம் மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில், வங்கதேசத்தில் ஜெனதா பகுதியில் உள்ள தவுதியா என்ற கிராமத்தில் காளி கோயில் உள்ளது. இதில் இருந்த சிலைகள் நள்ளிரவில் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு வீசப்பட்டு உள்ளது.
நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு சிலைகளுக்கு இறுதி வழிபாடு நடத்தப்பட உள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே, இந்தாண்டில் பலமுறை இந்நாட்டில் கோயில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துக்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதில், ஈடுபட்டவர்களை வங்கதேச போலீசார் தேடி வருகின்றனர்.