உயர்கல்வி துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் விளக்கம்!
சென்னையில் போராட்டம் நடத்தி வரும் கௌரவ விரிவுரையாளர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் என அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு உயர்கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. பணி நீக்கம் செய்யப்படும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி அனுபவச் சான்று தரக்கூடாது நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கூடாது கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தை கைவிட கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்படும் இடங்களுக்கு யுசிஜி விதிகளை பின்பற்றி தகுதியான நபர்களை நியமிக்க வேண்டும் என அறிக்கை வெளியானதாக பரவலாக பேசப்பட்டது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதியதாக நான்காயிரம் உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தற்பொழுது உயர்கல்வி துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் போராட்டத்தில் ஈடுபடும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பதற்காக வெளியான தகவல் மறுக்கப்பட்டுள்ளது. கௌரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலம் 4000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், அதில் தற்பொழுது பணி புரியும் கௌரவிரியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர்கல்வி துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார்.