சென்னை: சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகத்தில் இன்று மாலை 4 மணிக்கு மனித சங்கிலி நடைபெறுகிறது. 500 இடங்களில் மனிதசங்கிலி நடைபெறுவதாக திருக்கழுக்குன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று தெரிவித்தார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, தவாக தலைவர் வேல்முருகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தும் பிரிவினைவாதிகளை அனுமதிக்கமாட்டோம் என்று பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் மனித சங்கிலி நடைபெற உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைதியாக மனித சங்கிலி நடத்த வேண்டும்’ என்று தெரிவித் துள்ளனர்.