பீஜிங்:சீனாவின் பல்வேறு மாகாணங்களில், தற்போது கொரோனா பரவல் மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், மீண்டும் ஊடரங்கு மற்றும் பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நம் அண்டை நாடான சீனாவின் ஷான்சி மாகாணத்தில் பென்யாங்க் நகரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், அங்கு நேற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
ஹோஹாட் நகரில் கடந்த ௧௨ நாட்களில் ௨,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதிக்கு வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஜின்ஜியாங் மாகாணம், ஷாங்காய் மற்றும் நாட்டின் தலைநகரான பீஜிங்கில் சில பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சினிமா தியேட்டர் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டுள்ளன.
பீஜிங்கில் அடுத்த வாரம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மிகப்பெரிய கூட்டம் நடக்க உள்ள நிலையில், மோசமான விளைவுகள் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கவலையில் சீன தலைவர்கள் உள்ளனர்.
அதேநேரத்தில் இந்த கூட்டத்துக்குப் பின், கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என, பெரும்பாலான சீனர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement