ஈரானில் 22 வயது இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்ததைத் தொடர்ந்து அரசுக்கெதிரான போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து 4-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிஜாப் கட்டாயத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அங்கு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.