இதுவரை பிறப்பு பதிவு செய்யப்படாத பிள்ளைகளின் பிறப்பு பதிவுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் நேற்று (10 மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பிரதி பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா இதுவரை பிறப்பு பதிவினை செய்யாத பிள்ளைகளிற்கான பிறப்பு பதிவினை மேற்கொண்டார்.
இந்த விஷேட நிகழ்வில் 25 பிள்ளைகளுக்கு பிறப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.