
ராமின் ‛ஏழு கடல் ஏழு மலை'
கற்றது தமிழ், தங்கமீன்கள் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் தற்போது மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அஞ்சலி நாயகியாக நடிக்க, சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ், மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ராமின் முந்தைய படங்களை போன்று இந்த படமும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையில் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கு ‛ஏழு கடல் ஏழு மலை' என பெயரிட்டு டைட்டில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் ‛‛காதல்ன்னு வந்துட்டா மனசு மட்டுமல்ல, உடம்பு, உசுரு எல்லாம் பறக்கும'' என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. படத்தின் டைட்டிலேயே வித்தியாசமாக வெளியிட்டு படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளனர்.