கிராம பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், சர்வதேச உரிமைகள் கழகத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
வீரபாண்டியபுரம், மீளவிட்டான், மடத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் தவறான தகவல்களை பரப்பி ஆலை மூடப்பட்டு இருப்பதாகவும், 18 ஆண்டுகளாக தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.
இதற்கு இடையில் இந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என சர்வதேச உரிமைகள் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அதில், “போலியான ஆதரவாளர்களை உருவாக்கி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி மக்களுக்கு இடையில் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என்ற பிரிவினையை ஏற்படுத்தி சிலர் வன்முறை செய்ய முயற்சிக்கின்றனர்.” என்று அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.