கள்ளக்குறிச்சி அருகே தன்னைக் கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வாணியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவருக்கு சொந்தமான நிலத்தில் அவரது தம்பி விக்னேஷ் உள்ளிட்ட பலர் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்த கட்டு விரியன் பாம்பு விக்னேஷை மூன்று இடத்தில் கடித்துள்ளது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் விக்னேஷை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். தன்னை கடித்த பாம்புடன் விக்னேஷ் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து விக்னேஷிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
