சினிமா தயாரிப்பாளரான தோனி

இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக விளம்பர படங்களில் நடித்தவரும் தோனி. அந்தவகையில் தோனிக்கு எப்போதுமே மீடியா மீது ஒது தனி கவனம் இருந்து வந்தது.

விரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் விலகும் தோனி எதிர்காலத்தில் வேறு துறைகளில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார். தற்போது விளம்பரப் படங்களில் நடிப்பது மட்டுமின்றி சென்னையின் எப்.சி கால்பந்து அணி உரிமை, ஹோட்டல், ஜிம், ஷூ பிராண்ட் நிர்வகிப்பது, இயற்கை விவசாயம் செய்வது என வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் 'தோனி என்டெர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் 'தி ரோர் ஆப் தி லயன்' என்கிற ஆவணப்படத்தைத் தயாரித்துள்ள தோனி இனி நேரடி திரைப்படங்களைத் தயாரிக்க இருக்கிறார்.

முதல் கட்டமாக தமிழ், தெலுங்கு படங்களை தயாரிக்கிறார். இதற்கு ஆயத்தமாக தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கிளையை சென்னையில் தொடங்குகிறார். தீபாவளியை முன்னிட்டு இதன் திறப்பு விழாவும், முதல் தயாரிப்பு படம் பற்றிய அறிவிப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.