புதுடில்லி :நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த செப்டம்பரில் 7.41 சதவீதமாக உயர்வை கண்டுள்ளது.
இதையடுத்து, தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக, சில்லரை விலை பணவீக்கம், ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கான 6 சதவீதத்தை தாண்டி உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், பணவீக்கம் 4.35 சதவீதமாக இருந்தது. கடந்த ஆகஸ்டில் 7 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் மேலும் அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் விலை அதிகரித்தது இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
உணவு பொருட்கள் பிரிவில் பணவீக்கம் 8.60 சதவீதமாக அதிகரித்துள்ளது.ரிசர்வ் வங்கி, நாட்டின் சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில், அதன் குறுகியகால கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் துறை உற்பத்திநாட்டின் தொழில் துறை உற்பத்தி கடந்த ஆகஸ்டில் 0.8 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்டில் 13 சதவீதமாக வளர்ச்சியை கண்டிருந்தது.இது குறித்து மேலும் தெரி விக்கப்பட்டு உள்ளதாவது:தொழில் துறை உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் தயாரிப்பு துறை உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 0.7 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் சுரங்க துறை உற்பத்தி 3.9 சதவீதமாக பின்னடைவைக் கண்டுள்ளது.
மின்சார உற்பத்தி 1.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement