தேனி மாவட்டத்தில் நிலைதடுமாறி இருசக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மேகமலை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(60). இவர் தனது மகன் ராஜேஷ் கண்ணாவுடன் இருசக்கர வாகனத்தில் மேகமலையில் இருந்து மணலூர் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது திடீரென நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஹைவேவிஸ் போலீசார், மாரியப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.