குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு பெண்ணிடம் இருந்து மெசேஜ் வந்திருக்கிறது. சிறிது நேரம் சாதாரணமாக பேசி இருக்கிறார் அந்த பெண். திடீரென்று ஆபாசமாக பேசி இருக்கிறார். சில மெசேஜ்கள் அனுப்பிய பின்னர் அந்தப் பெண் வீடியோ கால் செய்திருக்கிறார். அந்த வீடியோ காலில் அந்த பெண் நிர்வாணமாக நின்று இருக்கிறார் வீடியோ காலில் வங்கி அதிகாரியின் முகத்துடன் வீடியோ ரெக்கார்டு செய்து இருக்கிறார் அந்த பெண்.
அதன் பின்னர் அவரது வாய்ஸ் கால் மூலம் தொடர்பு கொண்டு பத்தாயிரம் கேட்டு மிரட்டி இருக்கிறார். பணம் கொடுக்கவில்லை என்றால் போலீசில் புகார் அளிப்பேன் என்று சொல்லி மிரட்டிருக்கிறார். அதற்கு அந்த நபர் பணம் கொடுக்கவில்லை. இதன் பின்னர் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அன்று விக்ரம் ரத்தோட் என்பவர் அந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியை தொடர்பு கொண்டு தான் டெல்லி சைபர் கிரைம் காவல்துறையில் பணியாற்றுவதாக சொல்லி பேசி இருக்கிறார்.
ண் ஒருவர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்பட வேண்டும். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 16 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார். ஒரே தவணை இல்லாமல் சில தவணைகளில் பணத்தை செலுத்தலாம் என்றும் சொல்லி இருக்கிறார். அதன்படியே அனுப்பி வைத்திருக்கிறார்.
பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர், வீடியோவை அந்த பெண் யூட்யூபில் வெளியிட்டதாகவும் அந்த சேனலின் ஓனர் வந்து தொடர்பு கொள்வார் என்றும் சொல்லியிருக்கிறார். இரண்டு தினங்கள் கழித்து ஒருவர் தொடர்பு கொண்டு, வீடியோவை யூடியூபில் இருந்து நீக்க வேண்டும் என்றால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அன்றைய தினம் விடுமுறை என்பதால் நண்பர் ஒருவர் மூலம் பணத்தை ஆன்லைனில் அனுப்பி இருக்கிறார்.
இதன் பின்னரும் அவரை தொடர்பு கொண்டு அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டு விட்டார் . அந்த பெண்ணின் பெற்றோர்கள் இழப்பீடாக பணம் கேட்கிறார்கள் என்று கூறி இருக்கிறார் . இதனால் பயந்து போன அந்த வங்கி அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்திய போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியை மர்ம கும்பல் மோசடி செய்திருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.