சிம்பாப்வே அணிக்கு எதிரான ரி 20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 33 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை உலகக் கிண்ணப் போட்டிக்கான மற்றொரு பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி நாளை (13) அயர்லாந்து அணியை எதிர் கொள்ளவுள்ளது.
மெல்போர்னில் நேற்று (11) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி களத்தடுப்பை தெரிவு செய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதற்கமைய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களையே பெற்றது. அதிகபட்சமாக வெஸ்லி மெதெவர் 43 ஓட்டங்களை பெற்றார்.
சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன் மற்றும் சாமிக்க கருணாரத்ன தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ரி 20 உலகக் கிண்ண ஆரம்ப போட்டியில் இலங்கை அணி இம்மாதம் 16 ஆம் திகதி நமீபிய அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.