சென்னை மதுரவாயலில் வீட்டின் முதல் மாடி பால்கனியில் விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை கால் இடறி கீழே விழுந்ததில், தலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள கங்கை அம்மன் நகரில் வசித்து வரும் கால் டாக்ஸி ஓட்டுனராக பிரகாஷ் -ன் இரண்டு வயது மகள் தியா தனது அத்தை வீட்டில் முதல் மாடியில் விளையாடிக்கொண்டிருந்த போது கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் தலையில் படுகாயமடைந்த குழந்தை தியா சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.