போதிய சாக்குப்பைகள் இல்லாததால் தாமதமாகும் கொள்முதல்! தவிக்கும் விருத்தாச்சலம் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் போதிய அளவு சாக்குப்பைகள் கையிருப்பு இல்லாததால் விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 2 ஆயிரம் சாக்குப்பைகளுக்கு 700 சாக்குப்பைகள் தான் உபயோகிக்கும் நிலையில் இருப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல், உளுந்து, மணிலா, கம்பு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தானியங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கம்பு வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகளின் சாக்கு மூட்டையில் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள சாக்குக்கு தானியங்கள் மாற்றப்பட்டு விற்பனைக்கு பிறகு வியாபாரி சாக்குக்கு தானியங்கள் மாற்றப்படும். இந்த நிலையில் சாக்குப்பைகளுக்கு பற்றாக்குறை இருப்பதன் காரணமாக கிழிந்த சாக்கை பயன்படுத்துவதால் விவசாயிகளின் தானியங்கள் தரையில் கொட்டி வீணடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
image
மேலும் கிழிந்த சாக்குப்பையின் உள்ளே மற்றொரு சாக்குப்பையை உள்ளே திணித்து கொள்முதல் செய்யப்படுகிறது. 2 ஆயிரம் சாக்குப்பைகள் இருக்க வேண்டிய இடத்தில் 700 சாக்குப்பைகள் மட்டுமே இருப்பதால் தேவையற்ற நேர விரயம் ஏற்படுவதாக விவசாயிகளும் வியாபாரிகளும் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகளிடமிருந்து தானியங்களை கொள்முதல் செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
மாவட்ட நிர்வாகமும், ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகமும் விவசாயிகளுக்கு தேவையான சாக்குப்பைகளை கொள்முதல் செய்து இருப்பு வைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தானியங்கள் வீணாவதை தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
image
இது குறித்து வேளாண் விற்பனை துறை அதிகாரியிடம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கண்காணிப்பாளர் கேட்டதற்கு கூடுதல் சாக்குப்பைகள் தேவை குறித்து தபால் எழுதி உள்ளதாகவும் விரைவில் சாக்கு வந்துவிடும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: இறந்து கரை ஒதுங்கிய 450 திமிங்கலங்கள் – நியூசி. கடற்பகுதியில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.