சென்னை போரூரில் உள்ள அரசு பள்ளியில், மாணவர்களுக்கான இதழ்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவிகளுக்கு பேப்பரில் பூனை செய்ய கற்று கொடுத்தார்.
மேலும், இதழில் வரும் அமுதாவின் செடி என்ற கதையை மாணவிகள் மத்தியில் கூறினார். தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பருவ இதழ்களை வழங்கும் திட்டம் பள்ளி கல்வி துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
அத வகையில், ஊஞ்சல், தேன் சிட்டு என்ற இதழ்களும், ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் என்கிற மாதாந்திர இதழும் வெளியிடப்பட்டுள்ளது.