மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 29,000 கனஅடி நீரவரத்து!

சேலம்: மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 29,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் அணையில் இருந்து 28,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மின்நிலையங்கள் வழியாக 23,000 கனஅடியும் 16 கண் மதகுகள் வழியாக 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.