ராகுல் காந்திக்கு பாஜ பதிலடி; பங்கம் செய்யும் நெட்டிசன்கள்!

நாட்டில் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி, பாதயாத்திரையை தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாதயாத்திரை கேரளாவில் 19 நாட்கள் நடந்தது.

இதனை தொடர்ந்து கடந்த 30ம் தேதி ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை சாம்ராஜ்பேட்டை மாவட்டம் குண்டலுப்பேட்டை வழியாக கர்நாடகா மாநிலம் வந்து சேர்ந்தது.

அங்கு ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நஞ்சன்கூடு, மைசூரு, மண்டியா வழியாக பாதயாத்திரை துமகூரு மாவட்டத்திற்கு வந்தது.

பதுங்கி பாய்ந்த ஓபிஎஸ்; இபிஎஸ் கோட்டையில் பெரிய ஓட்டை!

இந்த பாதயாத்திரையில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு ராகுல் காந்தி பேசும்போது, ‘இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசாக கர்நாடகா அரசு உள்ளது. ஒவ்வொரு தனியான பரிவர்த்தனைக்கும் 40 சதவீத கமிஷன் வாங்குகிறார்கள்.

மேலும், 13000 தனியார் பள்ளிகள் 40 சதவீத கமிஷன் அளித்துள்ளன. என்னுடைய வார்த்தைகளை விடுங்கள். பாஜக எம்எல்ஏக்களே இது, கவும் ஊழல் நிறைந்த அரசு என்று கூறுகிறார்கள்’ என ராகுல் காந்தி பேசினார்.

சட்டபேரவை கட்டிடத்தில் பேய்?; 4 ஆண்டில் 6 எம்.எல்.ஏக்கள் சாவு!

ராகுல் காந்தியின் இந்த பேச்சு கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதற்கு பாஜகவினர் சரியான பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இறங்கி பல்பு வாங்கி இருக்கின்றனர்.

அதாவது ராகுல் காந்திக்கு போட்டியாக கர்நாடகாவில் ஆளும் பாஜக ராய்ச்சூர் மாவட்டத்தில் இருந்து ஜன்சங்கல்ப் யாத்திரையை துவங்கியது. இன்று 2வது நாளில் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான எடியூரப்பா ஆகியோர் கமலாபூர் கிராமத்தில், ஹிரலா கொல்லப்பா என்ற தலித் நபர் வீட்டில் காலை உணவு அருந்தினர்.

அப்போது அமைச்சர்கள் கோவிந்த் கரஜோல், ஆனந்த் சிங் ஆகியோரும் உடன் இருந்தனர். ஆனால் தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் குறித்து விமர்சனம் பெரிய அளவில் எழுந்துள்ளது.

தலித் ஒருவர் வீட்டில் உணவு அருந்துவதாக கூறிவிட்டு ஓட்டல் உணவு, இலை சாப்பாடு, பாட்டில் குடிநீர், காபி கப் ஆகியவற்றுடன் பாஜகவினர் நாடகம் ஆடுவதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.