2023ஆம் ஆண்டு எத்தனை நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதங்களில் அதற்கு அடுத்து பிறக்கும் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு துவங்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், 2023ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2023ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 24 நாட்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 8 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அமைந்துள்ளது. அரசு பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்படும்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலின்படி, ஜனவரி மாதத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை, பொங்கல் பண்டிகையையொட்டி, 15,16,17 ஆகிய தினங்கள் முறையே ஞாயிறு, திங்கள், செவ்வாய்கிழமைகளில் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு அரசு விடுமுறை தினங்கள்

அதேபோல், குடியரசு தினம், தை பூசம், தெலுங்கு வருடப்பிறப்பு, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொஹரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என்பன உள்ளிட்ட மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.