500 திமிங்கலங்கள் கருணை கொலை: காரணம் என்ன?

நியூசிலாந்து நாட்டில் இருந்து வெகுதொலைவில் சாத்தம் மற்றும் பிட் தீவுகள் உள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையன்று சாத்தம் தீவில் 250 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அடுத்த மூன்று நாட்கள் கழித்து பிட் தீவில் 240க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இந்த தீவுகள் பசுபிக் பெருங்கடலில் இருப்பதாகவும், அந்த பகுதிகளில் சுறா மீன்கள் அதிகம் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த சுறா மீன்களுக்கு பயந்து சுமார் 500க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த திமிங்கலங்களை மீண்டும் கடலில் விடுவது அவைகளுக்கும், மனிதர்களுக்கும் ஆபத்தாக முடியலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த திமிங்கலங்களை கருணை கொலை செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசு தொழில்நுட்ப கடல்வாழ் ஆலோசகர் தவே லண்ட்குவிஸ்ட் உதவியுடன் 500 திமிங்கலங்களும் கருணை கொலை செய்யப்பட்டுள்ளன. அவற்றின் உடல்கள் இயற்கையான முறையில் அழுகுவதற்கு அப்படியே விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு லட்சம் பேர் பணி நீக்கம்? -பிரதமரின் முடிவால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி!

சமூக அமைப்புடன் வாழக்கூடிய இத்தகைய திமிங்கலங்கள் சுமார் 20 அடி நீளம் வரை வளரக்கூடியவை. அதனால் தன்னுடைய இணை ஆபத்தில் சிக்கி இருக்கும்போது அதனை மற்ற திமிங்கலங்கள் பின் தொடர்ந்து செல்லும். அப்படி செல்லும் போது, கரையையொட்டி கிடைக்கும் உணவுகளை உண்ட பின்னர், வழிதெரியாமல் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.