சிறையில் இருக்கும் பனங்காட்டுப்படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே 29ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சாமிதுரை என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவாகியது.
இதனை தொடர்ந்து பனங்காட்டு படை கட்சியின் பிரமுகர் ஹரி நாடார் சமீபத்தில் கைதானார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த அக்டோபர் 7-ம் தேதி நாங்குநேரி கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைதாகினார்.
இதனை தொடர்ந்து இதனால் நெல்லை மாவட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. இத்தகைய நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் சிறையில் இருக்கும் பனங்காட்டுப்படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.