பொல்கஹவெல மற்றும் அலவ்வ புகையிரத நிலையங்களுக்கு இடையிலான யாங்கல்மோதர புகையிரத கடவை திருத்த வேலைகளுக்காக அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதி நாளை (14) முதல் 16 ஆம் திகதி வரை அவ்வப்போது மூடப்படும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை (14) காலை 7:00 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும், 15ம் திகதி காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும், 16ம் திகதி காலை 10:00 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், குறித்த வீதி முற்றாக மூடப்படும் என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.