அரியலூர் அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரை விட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் ஒரு இளம் பெண் தோட்டத்திற்கு சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. எனவே, சந்தேகம் அடைந்த அந்த பெண்ணின் தந்தை தோட்டத்திற்கு சென்ற மகளை அங்கே சென்று தேடிள்ளார்.
அப்பொழுது கிணற்றில் துப்பட்டா மற்றும் செருப்பு உள்ளிட்டவை மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.
இந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 36 மணிநேர போராட்டத்திற்கு பின் என்பது அடி ஆழத்தில் பிணமாக கிடந்த இளம் பெண்ணை மீட்டனர்.
சமீபத்தில் தான் இந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஜாமினில் வெளிவந்தார். இத்தகைய சூழலில் அவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.