இளவரசி டயனாவுடனான திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் அழுத சார்லஸ்! அடுத்தநாள் வந்து நின்ற கமிலா


டயனாவுடனான திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் அழுத சார்லஸ்.

திருமணத்தில் கலந்து கொண்ட கமிலா. 

பிரித்தானிய மன்னர் சார்லஸ், டயானாவை திருமணம் செய்து கொள்வதற்கு முந்தைய நாள் இரவில் அழுதார் என தெரியவந்துள்ளது.

சார்லஸுக்கும் டயானாவுக்கும் கடந்த 1981ல் திருமணம் நடைபெற்றது.
இதற்கு முன்பில் இருந்தே அவர் கமிலாவை காதலித்து வந்தார். ஆனால் அப்போது இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை.
ஏனெனில் டெய்லி ஸ்டார் பத்திரிக்கையின் கூற்றுபடி, அரச குடும்பம் கமிலாவை ஒரு பொருத்தமான இளவரசியாக பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் அரச குடும்ப நிபுணர் பெடெல் ஸ்மித்தின் கூற்றுப்படி, கமிலா அனுபவம் வாய்ந்த மற்றும் பல விடயங்களை அறிந்த பெண்ணாக கருதப்பட்டிருக்கிறார்.
சார்லஸை திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு அப்பாவிப் பெண்ணை தேர்வு செய்யவே அரச குடும்பம் விரும்பியது. அதற்கு சரியான நபராக டயானா தான் இருப்பார் என அவர்கள் நினைத்தனர் என கூறப்பட்டுள்ளது.

இளவரசி டயனாவுடனான திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் அழுத சார்லஸ்! அடுத்தநாள் வந்து நின்ற கமிலா | Charles Cried At Night Before Marriage Reveals

Chris Jackson/Clarence House

இதையடுத்து டயானாவுக்கும், சார்லஸுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் 1981, ஜூலை 29ஆம் திகதி நடைபெற்றது. The Passions and Paradoxes of an Improbable Life என்ற சார்லஸின் வாழ்க்கை வரலாற்று குறித்த தகவலின்படி, சார்லஸ் டயானாவுடனான தனது திருமணத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக உணர்ந்தார்.

மேலும் கமிலாவின் மீதான காதல் அவர் மனதில் வலியை ஏற்படுத்தியிருந்தது, கமிலாவுக்கு அந்த சமயத்தில் திருமணம் நடந்துவிட்ட போதிலும் அவரை மறக்க முடியாமல் தவித்தார்.

இளவரசி டயனாவுடனான திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் அழுத சார்லஸ்! அடுத்தநாள் வந்து நின்ற கமிலா | Charles Cried At Night Before Marriage Reveals

ANWAR HUSSEIN/WIREIMAGE

தனது திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் கூட அதை நினைத்து சார்லஸ் அழுதிருக்கிறார் என கூறப்பட்டுள்ளது.
சார்லஸ் – டயானா திருமணத்தில் கமிலாவும் கலந்து கொண்டார்.

சார்லஸ் – கமிலா இடையிலான டேட்டிங் வரலாறு இருந்தபோதிலும், அவர் அரச குடும்ப திருமணத்தின் விருந்தினர் பட்டியலில் இடம்பிடித்திருந்தார்.
ஏனெனில் அவரது கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் குதிரைப்படை மவுண்டட் ரெஜிமென்ட்டின் அதிகாரியாக இருந்தது அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

இளவரசி டயனாவுடனான திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் அழுத சார்லஸ்! அடுத்தநாள் வந்து நின்ற கமிலா | Charles Cried At Night Before Marriage Reveals

GETTY IMAGES



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.