’ஐ லவு யூ’ என்று கூறிய ரசிகர்.. தன்னுடைய ஸ்டைலில் நடிகர் பார்த்திபன் கொடுத்த கலகல ரிப்ளை!

பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கியின் பொன்னியின் செல்வன் இல்லை, மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் என திருச்சியில் நடிகர் பார்த்திபன் பேசினார்.

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி என்ற இடத்தில் மூர்த்திஸ் என்ற திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திறந்தவெளி திரையரங்கை திரைப்பட இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் மற்றும் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன், தமிழ் திரைப்படம் என்றாலே பொன்னியின் செல்வன், தமிழ் திரையுலகில் பாராட்டப்படக் கூடிய திரைப்படமாக உள்ளது என பேசியவரிடம் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பார்த்திபனின் கனவு என்ன? என்ற கேள்விக்கு, 

image

”உலகத்தில் முதல் படம் தயாரிக்கும் அளவிற்கு என்னுடைய கனவுகள் விரிந்து கொண்டிருக்கிறது. நான் அடுத்ததாக ஜாலியாக, கமர்சியலாக ஒரு திரைப்படம் எடுக்க உள்ளேன் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்கும்போது நானும் ஒரு நாள் இந்த திரைப்படத்தில் நடிப்பேன் என நினைக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் மணிரத்தின் உடைய பொன்னின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வனாக இருக்க வாய்ப்பில்லை. இயக்குனர் எதை சொல்லிக் கொடுக்கிறாரோ அதைத்தான் நான் செய்திருக்கிறேன்” என்றார்.

காதல் அதிகமாக இருப்பதினால் தான் இளமையாக இருக்கிறேன் பார்த்திபன் கூற அப்போது அங்கிருந்த ஒருவர் அவரைப் பார்த்து ஐ லவ் யூ என்று கூறினார். அதற்கு, “அவர் கூறியதில் சந்தோஷமும் வருத்தமும் இருக்கிறது. ஒரு ஆண் கூறியதால் வருத்தம் இருக்கிறது. ஆனால் யாராவது கூறுகிறார்களே என்ற சந்தோஷம் இருக்கிறது” என்றார்.

image

மேலும், “ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்றாலே அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். அவரை போல நடிக்க முயற்சி செய்வது மிகப்பெரிய தவறு. 12 வருடங்களுக்குப் பிறகு ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படம் பெயரை கூறும் போது ரசிகனுடைய கட்டுக்கடங்காத உற்சாகம். 12 வருடங்களுக்குப் பிறகு அந்தப் படத்திற்கு பாராட்ட பெறுவது மகிழ்ச்சியான விஷயம். உழைப்பு என்றும் வீண் போகாது அதுபோலத்தான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமாக உள்ளது

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூல், தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் இதற்காக ஆயிரத்தில் ஒருவனை போல் நன்றி சொல்ல காலம் தாழ்த்தக்கூடாது” எனப் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.