நியூயார்க், உக்ரைன் விவகாரம் தொடர்பான சிறப்பு ஐ.நா., பொது சபை கூட்டத்தின்போது, ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை தன்னுடன் ரஷ்யா இணைத்து கொண்டது. இதற்காக அந்தப் பிராந்திய மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஐ.நா., பொது சபை சிறப்பு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்தது.
அப்போது, ‘ஜம்மு – காஷ்மீரிலும் இதுபோல் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்’ என, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் துாதர் முனிர் அக்ரம் கருத்து தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் ருசிரா காம்போஜ் பேசியதாவது:
எங்கள் நாடு குறித்து இங்கு ஒரு குறிப்பிட்ட நாடு பேசியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே. ஆனால், ஐ.நா.,வில் தொடர்ந்து பொய்யான தகவல்களை தெரிவிக்கும் அந்நாட்டுக்கு, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement