சாலை பாதுகாப்பு உறுதிமொழியை முதல்வர் வாசிக்க பள்ளி மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்..!!

தமிழ்நாடு அரசுடன் இணைந்து கோயம்புத்தூர் உயிர் அறக்கட்டளை அமைப்பு ‘குட்டி காவலர்’ என்ற மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

கோவை கொடிசியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் சுமார் 5 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் இருந்தவாறே பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, உயிர் அறக்கட்டளை தலைவர் சஞ்ஜய் ஜெயவர்தனவேலு, நிர்வாக அறங்காவலர் டாக்டர் எஸ். ராஜசேகரன், அறங்காவலர் ஜி. சவுந்தரராஜன், புரவலர் எஸ்.வி. பாலசுப்பிரமணியம், உறுப்பினர் எஸ். நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவோம், அதிவேகமாக வாகனத்தை இயக்க மாட்டோம், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசமாட்டோம்’ என சாலை பாதுகாப்பு உறுதிமொழியை முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் வாசிக்க, பள்ளி மாணவர்கள் அந்த உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர். மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்தபடியே உறுதிமொழியேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.