’செத்த பயலே’ பிக்பாஸ் வீட்டில் அலப்பறையை ஆரம்பித்த ஜிபி முத்து

பிக்பாஸ் சீசன் 6 தமிழ் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஜிபி முத்து, சூப்பராக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவரின் செய்கைகள் அனைத்தும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது. அமுதவாணன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ஜிபி முத்துவுடன் நல்லா காம்போவில் இருக்கின்றனர். அவர்களுடன் இணைந்து நல்ல காமெடிகளை செய்து கொண்டிருக்கும் ஜிபி முத்து சில சமயங்களில் தன்னை கோபபடுத்தும் அமுதவாணனை வட்டார வழக்குகளிலும் திட்டிவிடுகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போதே வட்டார வழக்கு வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம் என கமல் ஹாசன் கூறியபோதும், அதனை ஜிபி முத்துவால் பிக்பாஸ் வீட்டிற்குள் கட்டுப்படுத்த முடியவில்லை.

இருப்பினும் அவருடைய இந்த செய்கைகளை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர். டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஜிபி முத்து ஆர்மி ஆரம்பித்து அவருடன் மல்லுக்கட்டுபவர்களை இப்போது வெளுக்கத் தொடங்கிவிட்டனர் அவரின் ரசிகர்கள். நேற்றைய நிகழ்ச்சியின்போது தனலட்சுமி, ஜிபி முத்துவை பார்த்து  நீங்கள் நடிக்கிறீர்கள் என கூற, இருவருக்கும் இடையே பெரும் சண்டையே வந்துவிட்டது. அந்த வார்த்தைகளை கேட்டு ஜிபி முத்துவால் அமைதியாக இருக்க முடியவில்லை. நான் நடிக்கிறேனா இல்லையா என்பது என்னுடைய நண்பர்களுக்கு தெரியும், நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் என பதிலுக்கு பதிலடி கொடுக்கிறார் ஜிபி முத்து. 

பின்னர் டைனிங் ஹாலில் அமர்ந்து திடீரென அழுகும் முத்துவை பார்த்தவுடன், சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்துகின்றனர். இதனால் நார்மல் மோடுக்கு வருகிறார் ஜிபி முத்து. இந்த வீடியோ ஒருபுறம் வைரலாகிக் கொண்டிருக்க மறுபுறம் அவரின் இன்னொரு வீடியோ வைரலாகியுள்ளது. அதாவது பேப்பர் ஐடி என்ற சேனலை, ஏலே செத்த பயலே என காமெடியாக திட்டிவிடுகிறார் ஜிபி முத்து. இதுவும் பார்ப்பதற்கு காமெடியாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.