நயன்தாரா குழந்தைகளின் வாடகை தாய் யார் தெரியுமா?… வெளியான தகவல்

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்தச் சூழலில் விக்னேஷ் இரண்டு நாள்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இரு குழந்தைகளுடன் அவரும், நயன்தாராவும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ”நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். நமது பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் என அனைத்து நல்ல வெளிப்பாடுகளும் இணைந்து இரண்டு  குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

ஜூன் மாதம்தான் இருவருக்கும் திருமணமான சூழலில் எப்படி அக்டோபர் மாதமே இவர்களுக்கு குழந்தை பிறந்தது என பலரும் கேள்வி எழுப்பி பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டனர். இதனையடுத்து அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர் என கூறப்படுகிறது. அதேசமயம் நயனும், விக்கியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதில் விதிகளை மீறினரா எனவும் கேள்வி எழுந்தது.

 

நிலைமை இப்படி இருக்க இந்த விவகாரம் தொடர்பாக நயனிடமும், விக்னேஷ் சிவனிடமும் விளக்கம் கேட்கப்படுமென்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். மேலும், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்தான் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. எனவே அங்கு பணி செய்யும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்த தமிழக சுகாதாரத் துறை அலுவலர்கள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே நயனுக்கு குழந்தை பெற்றுக்கொடுத்த வாடகைத் தாய் யார் என்ற கேள்வி ஏராளமானோரிடம் எழுந்தது. இந்தச் சூழலில் தற்போது வாடகைத் தாய் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது, கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா அம்மாநிலத்தில்தான் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரி படிக்கும்போது பழகிய தோழிகளில் சிலர் இன்னமும் அவருக்கு நெருக்கமானவர்களாக இருக்கின்றனர். திருமணத்திற்கு முன்பு நயன் ஏகப்பட்ட சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்தபோது அவருக்கு ஆதரவாக இருந்தது அந்தத் தோழிகள்தான் என கூறப்படுகிறது.

தற்போது அந்தத் தோழிகள் மூலம் ஒரு பெண் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்தான் வாடகைத் தாயாக குழந்தைகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார் என பேச்சு எழுந்திருக்கிறது. மேலும் தற்போது அந்தப் பெண் நயன் – விக்கி ஆகியோரின் பாதுகாப்பில் இருப்பதாகவும் தெரிகிறது. வாடகைத் தாய் விவகாரத்தில் விதிகள் மீறப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்து முதலில் நயனிடமும், பிறகு அந்தப் பெண்ணிடமும் விசாரிக்க விசாரணை குழு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.