நள்ளிரவில் பற்றி எரிந்த ஓடும் பேருந்து… 21 பேர் உடல் கருகி பலி!

பாகிஸ்தானின் கராச்சி அருகே நூரியா பாத் பகுதியில் நேற்று நள்ளிரவு (அக்.12) தனியார் பஸ் ஒன்று 50 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்து கொண்டிருந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் வழக்கத்தைவிட வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென்று தீப்பிடித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்தை உடனே நிறுத்தினார். ஆனால் பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியது. ஆழ்ந்த உறக்கத்தில் இகுந்த பயணிகள் கண்விழித்து பார்த்தபோது, தங்களை தீ சூழ்ந்துள்ளதை உணர்ந்து பதைபதைத்தனர். பயணிகள் சிலர் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து கீழே குதித்து உயிர் தப்பினர்.

ஆனால் பேருந்தை விட்டு வெளியேற முடியாமல் அதற்குள்ளே சிக்கி கொண்ட குழந்தைகள் உள்பட 21 பேர் தீயில் கருகி பஸ்சுக்குள்ளேயே பலியானார்கள். படுகாயம் அடை்ந்த 25 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சில நிமிடங்கள் போராடி பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர். பஸ்சில் இருந்த ஏசி பகுதியில் தீப்பிடித்ததாக இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது..

Rocket Attack: திடீரென தாக்கிய ராக்கெட்டுகள்; பாராளுமன்றம் அருகே ஒரே அழுகுரல்!

தீப்பிடித்த பஸ்சில் பயணத்தவர்கள் சமீபத்தில் பாகிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் அண்மையில் பெய்த கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு கராச்சியில் தங்க வைக்கப்பட்டனர்.

தற்போது வெள்ள பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து கராச்சியில் இருந்து சைர்பூர் நாரன் ஷா பகுதிக்கு மக்களை ஏற்றி கொண்டு பயணித்து கொண்டிருந்த போது பஸ் தீபிடித்து முற்றிலும் எரிந்தது 21 பேரின் பலி கொண்டது. இந்த துயரச் சம்பவம் பாகிஸ்தான் மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.