டி20 உலகக் கோப்பை அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்கி மார்ச் 08ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக இந்திய அணி கடந்த 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றதை இம்முறையும் வென்று தக்கவைக்கும் முணைப்பில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்தான், வரும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லவில்லை என்றால், கவுதம் கம்பீர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
Add Zee News as a Preferred Source
Gautam Gambhir: கம்பீர் மீது அதிருப்தி
இந்திய அணி டி20 போட்டிகளில் வெற்றிகளை குவித்து வந்தாலும், மற்ற வடிவான ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. சமீபத்தில் கூட நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி சொந்த மண்ணில் இழந்தது. இதனால் கவுதம் கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், இந்திய அணியில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை தேவையின்று கொண்டு வருகிறார், பிடித்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில்தான் மனோஜ் திவாரி இவ்வாறு கூறி உள்ளார்.
T20 World Cup 2026: கம்பீருக்கு கடைசி வாய்ப்பு
இது தொடர்பாக அவர் பேசுகையில், 2026 டி20 உலகக் கோப்பையை வெல்ல தவறும் பட்சத்தில் பிசிசிஐ கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கனவே கம்பீரின் ஒப்பந்த முடியும் வரைதான் நாங்கள் அவருடன் பயணிப்போம் என பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார். ஆனால் வரும் டி20 உலகக் கோப்பையை வெல்லவில்லை என்றாலே அவரை பிசிசிஐ நிக்கும் என நினைக்கிறேன்.
vvs laxman: புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன்?
அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படும் நிலையில், புதிய பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் சிறந்த தேர்வாக இருப்பார். அவர் ராகுல் டிராவிட் இல்லாதபோது, பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். அப்போது வெற்றிகளையும் பெற்றுத் தந்தார். எனவே பிசிசிஐ அவரை கொண்டுவர வேண்டும். அவர் ஒரு சீரான மனநிலையை கொண்டவர். அதுமட்டுமல்லாமல் நல்ல மனிதரும் கூட என மனோஜ் திவாரி கூறினார்.
மனோஜ் திவாரியின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் அவரது கருத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பிசிசிஐ-யும் கம்பீருக்கு டி20 உலகக் கோப்பையையே கடைசி வாய்ப்பாக கொடுத்திருக்கும் என தெரிகிறது. அதனை வெல்லும் பட்சத்தில் அவர் அப்பதவியில் தொடருவார். இல்லையென்றால், அப்பதிவியில் இருந்து நீச்சயம் நீக்கப்படுவார் என கூறப்படுகிறது.
India Squad For T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேட்ச்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங்.
About the Author
R Balaji