புதுடில்லி பிரதமர் மோடி மற்றும் பெண்கள் குறித்து அவதுாறாக பேசிய குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் கோபால் இட்டாலியாவை புதுடில்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.
குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர்கோபால் இட்டாலியா பேசும் இரண்டு, ‘வீடியோ’ க்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இதில், முதல் வீடியோவில் அவர் பிரதமர் மோடியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார்.
இரண்டாவது வீடியோவில், ‘சுரண்டலுக்கு அடிப்படை காரணமே கோவில்களும், இதிகாச கதைகளும் தான்.
‘பெண்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டுமானால் கோவில்களுக்கு செல்லாதீர்கள்’ என பேசினார்.
இந்த வீடியோ, நாட்டின் பிரதமரையும், பெண்களையும் அவமதிப்பதாக கூறிய தேசிய பெண்கள் கமிஷன் தலைவர் ரேகா சர்மா, இதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, கோபால் இட்டாலியாவுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பினார்.
இந்நிலையில், கோபால் இட்டாலியாவை புதுடில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, டில்லியில் உள்ள தேசிய பெண்கள் கமிஷன் அலுவலக வாசலில் நுாற்றுக்கணக்கான ஆத் ஆத்மி தொண்டர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று மணி நேர விசாரணைக்கு பின், கோபால் இட்டாலியாவை போலீசார் விடுவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement