பிறப்பு சான்றிதழில் குழந்தைகளின் பெயரை பெற்றோரே சேர்க்கும் வசதி டெல்லி மாநகராட்சியில் அறிமுகம்

புதுடெல்லி,

குழந்தைகளின் பிறப்பு உடனடியாக பதிவு செய்யப்படும்போது குழந்தைகளுக்கு பெயர் சூட்டப்பட்டு இருக்காது. பின்னர் பெயர் சூட்டியவுடன் அதை பிறப்பு பதிவாளரிடம் சொல்லி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெறும் வழக்கம் பல மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளது. இதில் பொதுமக்களுக்கு ஆகும் காலவிரயங்களை தடுக்க டெல்லி மாநகராட்சி எளிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி 4 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை குழந்தைகளின் பெற்றோரோ, பாதுகாவலரோ ஆன்லைனில் விண்ணப்பித்து உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பம் தானாகவே அங்கீகரிக்கப்படும் என டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.